2019ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் சீனா ஊடுருவியதற்கான எந்தவித ஆதாரங்களையும் தான் கண்டிருக்கவில்லை என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஞாயிறு கூறியுள்ளார்.
கனடாவின் உளவு பிரிவு சீனா கனடிய தேர்தலில் ஊடுருவல் செய்தது என்ற உளவை ரூடோவுக்கு தெரியப்படுத்தியதாக கனடாவின் Global News என்ற செய்தி சேவையின் புலனாய்வு செய்தி ஒன்று கூறியிருந்தது. அதையே ரூடோ தற்போது நிராகரிக்கிறார்.
ரூடோ தனது உரையில் “I do not have any information, nor have I been briefed on any federal candidates receiving any money from China” என்றுள்ளார்.
நவம்பர் 7ம் திகதி கனடாவின் Global News வெளியிட்ட செய்தியில் பெயர் குறிப்பிடப்படாத 11 வேட்பாளர்களும், 13 பிரச்சார ஊழியர்களும் சீனாவின் கனடிய தூதரகம் மூலம் பணம் பெற்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு Ontario மாகாண பாராளுமன்ற உறுப்பினர் $250,000 பணத்தை பரிமாறியதாகவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 7ம் திகதி வெளிவந்த பாரதூரமான இந்த குற்றச்சாட்டை ஏற்க அல்லது மறுக்க ஏன் ரூடோ 20ம் திகதி வரை பொறுத்திருந்தார் என்று கூறவில்லை. G20 அமர்வுக்கு முன் ரூடோ Global செய்தியை பொறுத்து இருந்தால், சீயுடனான சந்திப்பு முறுகல் குறைந்ததாக இருந்திருக்கும். G20 அமர்வில் சீன சனாதிபதி ரூடோவை உதாசீனம் செய்ய இதுவும் ஒரு காரணாமாகலாம்.
மேற்படி 11 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுமாறு கனடாவின் எதிர்க்கட்சி கேட்டுள்ளது.