கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு அமெரிக்கா பாதுகாப்பு

கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு அமெரிக்கா பாதுகாப்பு

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து அமெரிக்க பத்திரிகையாளரான கசோகி (Jamal Khashoggi) படுகொலை செய்யப்பட்ட விசயத்தில் அமெரிக்காவின் பைடென் அரசு சவுதி இளவரசருக்கு சட்ட பாதுகாப்பு (immunity) வழங்க நேற்று வியாழன் அறிவித்து உள்ளது. இதனால் குமுறுகிறார் கசோகியை திருமணம் செய்யவிருந்த Hatice Cengiz என்ற பெண்.

அமெரிக்கா இந்த கொலைக்கு ஒரு வெளிச்சத்தை தரும் என்று தான் கருத்தியதாகவும் ஆனால் தற்போது பணமே மேலே வந்துள்ளதாகவும் Hatice Cengiz கூறியுள்ளார்.

சனநாயகம், மனித உரிமைகள், பத்திரிகையாளர் சுதந்திரம் என்றெல்லாம் பறைசாற்றும் அமெரிக்கா, குறிப்பாக Democratic கட்சி கசோகி விசயத்தில் சவுதியின் எரிபொருளே அமெரிக்காவுக்கு உயர்ந்த பெறுமதி கொண்டது என்கிறது.

சவுதி இளவரசரை சாடி Washington Post என்ற அமெரிக்க பத்திரிகையில் எழுதிய கசோகியை 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள தூதரகத்து வரவழைத்து படுகொலை செய்தனர் சில சவுதி அதிகாரிகள். அமெரிக்க புலனாய்வு இளவரசர் Mohammed வழங்கிய கட்டளையின் காரணமாகவே கசோகி கொலை செய்யப்பட்டு இருந்தார் என்று கூறியது. கசோகி சவுதியில் பிறந்தவர்.

சவுதி செய்ததை சீனாவோ, வடகொரியாவோ, ஈரானோ செய்திருந்தால் குளறி அழுத்திருக்கும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகள். கூடவே நாலு அதிகாரிகள் மீது தடையும் விதித்திருக்கும்.

அமெரிக்கா சவுதியிடம் எதிர்பார்ப்பது அதிகரித்த அளவு எண்ணெய் உற்பத்தியையே.