இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 அமர்வுக்கு சென்று இருந்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ சீன சனாதிபதி சீயை இடைமறித்து பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கேட்டபோது சீ முன்னர் இடம்பெற்ற பேச்சுக்களின் கசிவுகளை சுட்டிக்காட்டி தனது வெறுப்பை தெரிவித்து உள்ளார்.
இந்த உரையாடல் hot mic எனப்படும் திட்டமிடப்படாத ஒலிவாங்கி ஒன்று மூலமே பதிவு செய்யப்பட்டு பகிரங்கத்துக்கு வந்துள்ளது.
ரூடோவின் அழைப்புக்கு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிலளித்த சீ நாங்கள் பேசியது எல்லாம் பத்திரிகைகளுக்கு கசிய விடப்பட்டுள்ளது, அது சரியான முறை அல்ல (Everything we discussed has been leaked to the papers and that is not appropriate) என்றுள்ளார். அத்துடன் “if there is sincerity, we can communicate well with mutual respect, otherwise the outcome will not be easy to tell” என்றும், கசிவில் உள்ளதுபோல் பேச்சுக்கள் இடம்பெறவில்லை என்றும் சீ கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ரூடோ கனடாவில் சுதந்திரமான, பகிரங்கமான, ஒளிவு மறைவு இன்றிய பேச்சுக்களில் நம்பிக்கை கொண்டுள்ளோம் (In Canada we believe in a free and open and frank dialogue and we will continue to have and we will) என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த சீ முதலில் பேச்சுவார்த்தைக்கு தகுந்த சூழலை உருவாக்குமாறு கூறி நகர்ந்தார்.
ரூடோ கூறியதுபோல் கனடா அமெரிக்கா, பிரித்தானியா, நேட்டோ நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற நட்பு நாடுகளுடன் செய்யும் பேச்சுவார்த்தைகளை இலகுவில் பகிரங்கம் செய்வதில்லை.