அமெரிக்காவின் Drug Enforcement Administration (DEA) என்ற போதை கடத்தல் தடுப்பு அமைப்பின் உறுப்பினர் பெருமளவு இலஞ்சம் பெற்று தம்மை வளப்படுத்துகின்றனர் என்று Jose Irizarry என்ற 48 வயதுடைய முன்னாள் DEA உறுப்பினர் கூறியுள்ளார். இவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் சிறை செல்கிறார். தன மீதான வழங்கின்போதே இவர் இதை தெரிவித்தார்.
முன்னாள் DEA உறுப்பினரான Irizarry $20,000 இலஞ்சம் பெற்றதாக கூறியே கைது செய்யப்பட்டு இருந்தார். இவர் 2018ம் ஆண்டு DEA பதவியில் இருந்து விலகி இருந்தார்.
ஆனால் தான் அகப்பட்டுக்கொண்ட காரணத்தால் ஏனையோரையும் குறை கூறுகிறார் என்று DEA Irizarryயின் குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த Florida மாநிலத்து Tampa என்ற நகரின் நீதிபதி Charlene Honeywell சந்தேக நபரான Irizarry தெரிவித்த விபரங்களை தான் ஓரளவு நம்புவதாக கூறியுள்ளார்.
போதை கடத்தல், பண கடத்தல் விசாரணைகளை செய்வதாக கூறி தாம் கால்பந்து, tennis போன்ற பெரும் விளையாட்டுகள் நகரங்களுக்கு சென்று விளையாட்டுகளை கண்டு மகிழ்வதாகவும் இவர் கூறியுள்ளார். போதை கடத்துவோர் வழங்கும் yacht, மது, மாது எல்லாவற்றையும் தாம் கொண்டாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். கள்ள கணக்குகள் பதிந்து பணத்தையும் திருடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
George Zoumberos என்ற உறுப்பினரும் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். 2018ம் ஆண்டு இவர் Madrid நகரில் பாலியல் தாக்குதல் சொத்தாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர் திருமண புகைப்பட தொழில் செய்யும் சகோதரனை DEA உறுப்பினர் போல் அரச செலவில் உலகம் எங்கும் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
தான் எதையும் புதிதாக செய்யவில்லை என்றும், எல்லோரும் செய்வதையே செய்ததாக Irizarry கூறியுள்ளார். இவர் தனது மனைவிக்கு $30,000 பெறுமதியான Tiffany வைர மோதிரம் வழங்கி இருந்தார். இவரிடம் $767,000 பெறுமதியான வீடு உள்ளது. இவரிடம் பல ஆடம்பர கார்கள் உள்ளன.
அமெரிக்காவின் DEA சுமார் 4,600 உறுப்பினர்களை 69 நாடுகளில் கொண்டுள்ளது.