FTX என்ற crypto பரிமாறல் (crypto exchange) நிறுவனம் வெள்ளிக்கிழமை முறிந்து உள்ளது. பஹாமாஸ் (Bahamas) நாட்டில் தலைமை செயலகத்தை கொண்ட இந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை Chapter 11 என்ற bankruptcy நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தை ஆரம்பித்த Samuel Bankman-Fried தற்போது தலைமறைவாகி உள்ளார். அமெரிக்கரான இவர் பஹாமாஸிலேயே வாழ்ந்தவர். இவர் 2019ம் ஆண்டு, தனது 27 வயதில், இந்த cryptocurrency நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார்.
இந்த நிறுவனம் குளறுபடியில் உள்ளது என்பதை அறிந்த முதலீட்டாளர் சுமார் 72 மணி நேரத்தில் $6 பில்லியன் முதலீடுகளை திரும்ப பெற்றுள்ளனர். அதனால் FTX நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளானது.
Binance என்ற போட்டி நிறுவனம் FTX நிறுவனத்தை பொறுப்பு ஏற்க முனைந்திருந்தாலும் FTX கணக்கு பதிவுகளில் உள்ள குளறுபடிகள் காரணமாக FTX நிறுவனத்தை கைவிட்டு இருந்தது.
Bankman-Fried முதலீட்டாளரின் $10 பில்லியன் பணத்தை சட்டத்துக்கு முரணாக Alameda Research என்ற தனது சொந்த நிறுவனத்துக்கு மாற்றி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. Alameda Research நிறுவனத்தில் இருந்து $1 பில்லியன் சொத்து அடையாளம் காணப்படாத முறையில் மறைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் $473 மில்லியன் பெறுமதியான crypto பணம் வேறு ஒரு கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
Bankman-Fried கையில் தமது முதலீடுகளை இழந்தோரில் Tom Brady என்ற நடிகர், Kevin O’Leary என்ற கனடிய செல்வந்தர் ஆகியோரும் ஜப்பானின் Softbank, Sequoia Capital ஆகிய முதலீட்டு நிறுவனங்களும் அடங்கும். இவற்றில் சிலர் தமது முதலீடுகளை அறவிட முடியா கடன் ஆக கணித்து உள்ளனர்.
யூத பெற்றோருக்கு பிறந்த Bankman-Fried அமெரிக்காவின் Stanford University யில் கல்வி கற்றவர்.