திக்கு தெரியாத நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவுகள்

திக்கு தெரியாத நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவுகள்

அமெரிக்காவின் midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெற்றது செவ்வாய்க்கிழமை. அனால் இதுவரை வெளிவந்த முடிவுகள் தற்போதும் திக்கு தெரியாத நிலையில் அமெரிக்காவை வைத்துள்ளது. அத்துடன் இறுதியாக வெளிவரும் முடிவுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவை சிதைத்தெடுக்கும் நிலையிலும் உள்ளது.

அமெரிக்க அரசு 3 பலமான கைகளில் உள்ளது. ஒன்று சனாதிபதியை கொண்ட வெள்ளை மாளிகை. ஆனால் சனாதிபதி தான் நினைத்தது எதையும் இலகுவில் செய்ய முடியாது. அமெரிக்க காங்கிரஸ், supreme court ஆகியன அரசின் ஏனைய இரண்டு அங்கங்களாகும்.

காங்கிரசில் இரண்டு சபைகள் உண்டு. ஒன்று 100 ஆசனங்களை கொண்ட Senate, மற்றையது 435 ஆசனங்களை கொண்ட House. பொதுவாக House, Senate ஆகிய இரண்டிலும் தனித்தனியாக ஏற்றுக்கொள்ளப்படும் தீர்மானங்களே சனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படும்.

தற்காலங்களில் அமெரிக்கா இரண்டாக பிளந்து உள்ளது. செவ்வாய் இடம்பெற்ற தேர்தலும் அவ்வாறே.

இதுவரை எண்ணப்பட வாக்குகளின்படி Republican கட்சி 49 Senate ஆசனங்களை வென்றுள்ளது. பைடெனின் Democratic கட்சி 48 Senate ஆசனங்களை வென்றுள்ளது. Arizona, Georgia, Nevada ஆகிய மாநிலங்களுக்குரிய 3 Senate கணக்கெடுப்புகள் தற்போதும் தொடர்கின்றன. இந்த மாநிலங்களில் இரு கட்சி வேட்பாளர்களும் ஏறக்குறை ஒரே அளவு வாக்குகளை பெற்று உள்ளனர். சில மாநிலங்களில் மீண்டும் ஒரு தேர்தல் டிசம்பர் 6ம் திகதி இடம்பெறலாம்.

ஒரு கட்சி Senate அதிகாரத்தை பெற குறைந்தது 51 Senate ஆசனங்களை வெற்றி பெறுதல் அவசியம். Senate சபைக்கு வரும் தீர்மானம் ஒன்று 50 வாக்குகளை ஆதரவாகவும், 50 வாக்குகளை எதிர்ப்பாகவும் பெற்றால், Senate சபையின் தலைவர் ஆக இருக்கும் உதவி சனாதிபதி வாக்களித்து முடிவை பெறுவர்.

மொத்தம் 435 உறுப்பினர்களை கொண்ட House சபையை கைக்கொள்ள குறைந்தது 218 ஆசனங்களை ஒரு கட்சி வெல்லல் அவசியம். தற்போது எண்ணப்பட்ட வாக்குகளின்படி Republican கட்சி 211 House ஆசனங்களையும், பைடெனின் Democratic கட்சி 198 House ஆசனங்களையும் வென்றுள்ளன. Republican கட்சி முன்னரருடன் ஒப்பிடுகையில் 12 மேலதிக House ஆசனங்களை பெற்றுள்ளது. இதன் வாக்கு கணக்கெடுப்புகளும் தொடர்கின்றன.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பின் Republican கட்சி 218 ஆசனங்களுக்கு மேல் பெற்று House சபையை கட்டுப்படுத்தலாம். அந்நிலை ஏற்பட்டால் பைடென் பலமாக முடக்கப்படுவார்.

அத்துடன் ரம்ப் ஆதரவாளர் பைடென், அவரின் மகன் ஆகியோர் மீது பழிவாங்கல் சட்டங்களை நடைமுறை செய்ய முனையலாம். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் உருப்படியாக எதுவும் நடைபெறாது அமையலாம்.