பிரித்தானியாவில் அமைச்சர் Williamson பதவி விலகினார்

பிரித்தானியாவில் அமைச்சர் Williamson பதவி விலகினார்

பிரதமர் Rishi Sunak தலைமையிலான பிரித்தானிய அரசில் இருந்து Sir Gavin Williamson என்ற இலாகா இல்லாத அமைச்சர் இன்று பதவி விலகியுள்ளார். Williamson தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பயமுறுத்தினார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு.

Williamson முன்னர் கட்சியின் chief whip ஆக பதவி வகித்த காலத்தில் அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் மிரட்டினார் என்று அவரின் காலத்தில் deputy chief whip ஆக பணியாற்றிய Anne Milton என்ற உறுப்பினர் Channel 4 செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார்.

ஒரு தடவை Williamson காசோலை ஒன்றை தன்னிடம் வழங்கி அதை ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கும்படியும் கூறியதாக Milton தெரிவித்து உள்ளார். அத்துடன் அந்த காசோலையை பெறும் பாராளுமன்ற உறுப்பினரிடம் “make sure when you give him this check, he knows I now own him.” என்று கேட்டுள்ளதாகவும் Milton கூறியுள்ளார்.

ஆனாலும் தான் காசோலையை மட்டும் மேற்படி உறுப்பினருக்கு வழங்கியதாகவும், மிரட்டல் செய்தியை தெரிவிக்கவில்லை என்றும் Milton கூறியுள்ளார்.