சீனாவின் புலனாய்வு கப்பலான Yuan Wang 6 தற்போது இந்து சமுத்திரத்தை நோக்கி பயணிக்கிறது. இக்கப்பலின் வரவால் இந்தியா மீண்டும் தனது எல்லை கடலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளது.
இந்தியா தனது கரையில் இருந்து 200 கடல் மைல் தூரம்வரை உள்ள Exclusive Economic Zone என்ற வர்த்தக வலயத்தை பாதுகாக்க தேவையான நடவடிககைளை எடுக்கிறது. ஆனால் மேற்படி கப்பல் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அழைப்பில் சென்றால் இந்தியா எதுவும் செய்ய முடியாது.
இந்தோசிய தீவுகள் ஊடே இந்து சமுத்திரத்தை நோக்கி பயணிக்கும் இந்த கப்பல் செல்லும் துறைமுகம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது சீனாவின் கையில் இருப்பதால் இக்கப்பல் அங்கு செல்லும் வாய்ப்பும் உண்டு.
ஆகஸ்ட் மாதம் Yuan Wang 5 அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தபோது இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. ஆனால் இந்தியாவால் அந்த கப்பலின் வருகையை தடுக்க முடியவில்லை.
சுமார் 222 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட Yuan wang 6 கப்பலும் ஏவுகணைகள், செய்மதிகளை வேவு பார்க்கக்கும் வசதிகளை கொண்டது.