அமெரிக்காவில் இன்று சனி இரவு ஒருவர் (அல்லது ஒரு குழு) $1.6 பில்லியன் லொத்தர் பரிசை வென்று இருக்கலாம். அவ்வாறு வென்று இருந்தால் இதுவே உலகில் மிகப்பெரிய லொத்தர் பரிசாகும்.
Powerball என்ற இந்த லொத்தரில் இன்றைய வெற்றி பெறும் இலக்கங்கள் 28-45-53-56-69 ஆகும். அத்துடன் Powerball இலக்கம் 20 ஆகும். ஒருவர் வெற்றி பெற மேற்படி 6 இலக்கங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
பரிசு $1.6 பில்லியன் ஆனாலும், அரச வரிகளின் பின் வெற்றியாளர் பெறக்கூடியது சுமார் $782 மில்லியன் மட்டுமே. வெற்றி பணத்தை மொத்தமாக அல்லது 30 ஆண்டுகளுக்கு சிறு தொகைகளாக பெறலாம்.
மேற்படி வெற்றி இலக்கங்கள் எவராலும் வரையப்பட்டனவா என்பது நாளை ஞாயிறு தெரியவரும். இன்றைய பரிசை ஒருவரும் வரைந்திருக்காவிட்டால், அடுத்த குலுக்கலில் பரிசு தொகை மேலும் அதிகரிக்கும்.
இதுவரை 2016 ஆண்டு ஜனவரி மாதம் வெற்றி பெற்ற $1.586 பில்லியன் Paowrball பரிசே மிக பெரிய லொத்தர் பரிசாக இருந்தது.
ஒரு Powerball கட்டணம் $2 மட்டுமே.
ஒருவர் Powerball வெல்வதற்கான நிகழ்த்தவு சுமார் 292.2 மில்லியனுக்கு 1 ஆகும்.