இலங்கை பெண்ணின் Traditional Me என்ற YouTube தொடர்

இலங்கை பெண்ணின் Traditional Me என்ற YouTube தொடர்

இலங்கை பெண்ணான Nadee பதியும் Traditional Me என்ற YouTube சமையல் தொடரை தற்போது 1.6 மில்லியன் பேர் பார்வை செய்கின்றனர். மிக சாதாரண முறையில் சமையல் செய்து காட்டும் Nadee தான் Li Ziqi என்ற சீன பெண்ணின் YouTube தொடரை பார்த்தே கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். Li Ziqi தொடர் சுமார் 20 மில்லியன் பேரின் பார்வையை கொண்டது.

ஆரம்பத்தில் Nadee தயாரித்த YouTube விடீயோக்கள் அதிகம் பார்வைகளை பெற்று இருக்கவில்லை. ஆனால் 2020ம் ஆண்டில் Nadee இலங்கையின் Rasavimana என்ற சமையல் வெளியீட்டுடன் இணைந்து செயல்பட, பார்வையாளர் தொகையும் அதிகரித்தது. Rasavimana வீடியோ தயாரிப்பாளர் தனது பதிவுகளை தரமாக்கினார் என்கிறார் Nadee.

Nadee இலங்கையின் Dankotuwa என்ற கிராமத்தில் பாட்டி, தம்பியுடன் வாழ்பவர். தனக்கு அமைதியான, முன்னோர்கள் வாழ்ந்தது போன்ற வாழ்க்கையே விருப்பம் என்பதாலேயே Tradination என்ற பதம் வீடியோக்களுக்கு தலைப்பு ஆகியது என்கிறார் Nadee. ஆனாலும் புதியவைகளையும் பாராட்டுகிறார் Nadee.

தான் சமையல் கலையை பயில தனது பாட்டியும், Dhammi என்ற உறவினரும் காரணம் என்கிறார் Nadee.

ஒவ்வொரு வீடியோ தயாரிப்புக்கு சுமார் 10 முதல் 12 தினங்கள் தேவை என்கிறார் Nadee.