இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் Morbi என்ற நகரில் உள்ள பிரித்தானியர் காலத்து Hanging Bridge of Morbi என்ற பாலம் உடைந்து வீழ்ந்தால் குறைந்தது 68 பேர் பலியாகி உள்ளனர். Machhu என்ற ஆற்றுக்கு மேலால் செல்லும் இந்த பாலம் உடைந்ததால் அதில் பயணித்தோர் ஆற்றுள் விழுந்துள்ளனர்.
பாதசாரிகளுக்கு மட்டுமான இந்த தொங்கு பாலம் (suspension bridge) உடைந்த நேரத்தில் அதில் சுமார் 400 பேர் அதில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பலரின் இருப்பிடம் இதுவரை அறியப்படவில்லை.
இந்த பாலம் உல்லாச பயணிகளை கவரும் இடம்.
230 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 143 ஆண்டுகளுக்கு முன், 19ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் கட்டப்பட்டது. சுமார் 6 மாதங்கள் இந்த பாலம் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டு இருந்தது. நான்கு தினங்களுக்கு முன், குஜராத் புதுவருடத்திற்கு அக்டோபர் 26ம் திகதி இந்த பாலம் மீண்டும் பாவனைக்கு வந்திருந்தது.