நவம்பரின் பின் அமெரிக்கா யுகிரேனை மெல்ல கைவிடும்?

நவம்பரின் பின் அமெரிக்கா யுகிரேனை மெல்ல கைவிடும்?

வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி அமெரிக்காவில் Mid-term என்ற தேர்தல் இடம்பெறும். ஒவ்வொரு நாலு ஆண்டுகளில் இடம்பெறும் சனாதிபதி தேர்தல்களுக்கு நடுவில் வருவது இந்த Mid-term தேர்தல்.

இம்முறை Mid-term தேர்தலில் பைடெனின் Democratic கட்சி House, Senate ஆகிய இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையை இழக்கலாம் என்ற பயம் Democratic கட்சியினருக்கு தோன்றியுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் பைடென் அல்லது Democratic கட்சி தாம் நினைத்ததை செய்ய முடியாது இருக்கும்.

அதனால் யுகிரேனுக்கான அமெரிக்காவின் ஆயுத, தொழில்நுட்ப, பண உதவிகளும் Republican கட்சியால் வெகுவாக குறைக்கப்படலாம்.

இதுவரை அமெரிக்காவின் பைடென் அரசு சுமார் $52 பில்லியன் பெறுமதியான உதவிகளை யுகிரேனுக்கு செய்துள்ளது. ஏனைய நாடுகள் கூட்டாக $25 பில்லியன் பெறுமதியான உதவிகளையே வழங்கி உள்ளன.

அமெரிக்கா இவ்வாறு தொடர்ந்தும் பெருமளவு உதவிகளை வழங்க முடியாது என்று Republican கட்சி உறுப்பினர் தற்போது கூற ஆரம்பித்துள்ளனர். சில Democratic கட்சி உறுப்பினரும் இவ்வாறு கூற ஆரம்பித்து உள்ளனர். விலைவாசிகள் காரணமாக  அமெரிக்காவின் பொருளாதாரமும் மந்த நிலையிக்கு செல்கிறது.

அமெரிக்காவின் Pew Research செய்த கணிப்புகளின்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் 7% அமெரிக்கர் மட்டுமே அமெரிக்கா அளவுக்கு அதிகம் உதவியை யுகிரேனுக்கு வழங்கியதாக கூறியிருந்தனர். மே மாதம் அத்தொகை 12% ஆக அதிகரித்து, செப்டம்பர் மாதம் 20% ஆக அதிகரித்து உள்ளது.

யுத்தம் நீண்டகாலம் இழுபட்டால் மேற்கு சோர்ந்துவிடும் என்பது பூட்டினின் கனவாக இருக்கலாம்.