இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான தேசிய நுகர்வோர் விலை சுட்டி (National Consumer Price Index அல்லது NCPI) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 73.7% ஆல் அதிகரித்து உள்ளது. அதாவது 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நுகர்வோர் பொருட்கள் 2021ம் ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் சராசரியாக 73.7% ஆல் அதிகரித்து உள்ளது.
அனைத்து பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலை சுட்டி இலங்கையில் 73.7% ஆக அதிகரித்தமை இதுவே முதல் தடவை. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் சுட்டி 70.2% ஆல் அதிகரித்து இருந்தது.
உணவு பொருட்களை மட்டும் கருத்தில் கொண்டால் ஆகஸ்ட் மாதம் 84.6% ஆக இருந்த சுட்டி செப்டம்பர் மாதம் 85.5% ஆக அதிகரித்து உள்ளது.
கொழும்பை மட்டும் கருத்தில் கொண்டால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத கொழும்பு நுகர்வோர் விலை சுட்டி 69.8% ஆக இருந்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வரிகளை அதிகரிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. மேலதிக வரிகள் நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்தும் என்று கருதினாலும், அரசியல்வாதிகள் அரச பணத்தை தொடர்ந்தும் கொள்ளையடித்தால் மேலதிக வரிகள் எந்த பயனையும் வழங்கா.