2019ம் ஆண்டு பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ. ஆட்சி இந்தியாவில் Citizenship Amendment Act (CAA) என்ற ஒரு சட்டத்தை நடைமுறை செய்திருந்தது. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியா வரும் இந்து அகதிகள் இந்திய குடியுரிமை பெற உரிமை இருந்தது. இந்த சட்டம் மிக சிறு தொகையினரை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தது.
ஆனால் இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இந்தியா சென்ற பல்லாயிரம் இந்துக்களுக்கு அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு CAA மூலமான இந்திய குடியுரிமை சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. உண்மையில் இலங்கை யுத்தத்தை இந்தியாவே பயிற்சி வழங்கி, ஆயுதம் வழங்கி ஊதி பெருபித்து வளர்த்திருந்தது.
CAA சட்டம் மூலம் மோதி அரசு மிக சிறிய எண்ணிக்கையிலான குடியுரிமை வழங்கி பெரிதளவு அரசியல் ஆதாயம் தேடவே முனைந்தது. குறிப்பாக வட மாநிலங்களில் இது சாத்தியமும் ஆயிற்று. ஆனால் தமிழ்நாட்டில் இந்த கபடம் அரசியல் தொல்லை ஆகியது.
தற்போது Madras High Court நீதிபதி GR சுவாமிநாதனும் CAA உரிமை இலங்கை இந்து அகதிகளுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் மத்திய அரசு இதற்கான பதிலை வரும் 16 கிழமைகளுள் அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கூற்று தமிழ்நாட்டு பா. ஜ. கட்சி தலைவர்களுக்கு மேலும் தலையிடி ஆகலாம்.
இந்த வழக்கை இலங்கை பெண்ணான S. அபிராமி, வயது 29, தாக்கல் செய்திருந்தார். இலங்கையில் இருந்து சென்ற பெற்றோருக்கு திருச்சி வைத்தியசாலையில் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி பிறந்த இவர் இந்தியாவிலேயே கல்வி கற்று இருந்தார். இவரிடம் Aadhaar என்ற இந்திய அடையாள அட்டையும் உண்டு.