செயல்முறை: Tofu கறி

செயல்முறை: Tofu கறி

அம்பிகா ஆனந்தன்

தேவையான பொருட்கள் (5 பேருக்கு பரிமாற):
1. மெதுமையான tofu சுமார் 1.0 kg
2. இரண்டு (2) நடுத்தர அளவான தக்காளி
3. ஒரு (1) நடுத்தர அளவான வெங்காயம்
4. ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்
5. சிறிது கருவேப்பிலை
6. கறித்தூள் ஒண்டரை (1.5) தேகரண்டி
7. கடுகு, பெரும் சீரகம், வெந்தயம் அளவாக (தாழிக்க)
8. சிறிது எண்ணை பொரிக்க
9. உப்பு அளவாக
10. பால் ஒரு (1) கப் (அல்லது அரை கப் cream)

படிமுறை:
1. Tofuவை சிறு துண்டுகளாக வெட்டி, பொரித்து, எண்ணையை வடித்து வைக்கவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மூன்றையும் சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
3. தாச்சியில் சிறிது எண்ணை விட்டு, கடுகை வெடிக்கும் வரை பொரித்து பின் பெரிய சீரகம்,வெந்தயம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து பொரிக்கவும்.
4. மேற்கூறியவை பொன் நிறமானவுடன் வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்து பொன் நிறமாகும்வரை வதக்கவும்.
5. பின் தக்காளி துண்டுகளையும் அளவான உப்பையும் போட்டு மூடி 3 அல்லது 4 நிமிடம் வேகவிடவும்.
6. பின் கறித்தூளை போட்டு, நன்கு பிரட்டி, தக்காளி பசையாகும்வரை அவிக்கவும்.
7. பின் பால் சேர்த்து, குழம்பு தடிப்பானவுடன், பொரித்து வைத்த tofu துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.