1962ம் ஆண்டுக்கு பின் அணு யுத்த சாத்தியம் அதிக அளவில்

1962ம் ஆண்டுக்கு பின் அணு யுத்த சாத்தியம் அதிக அளவில்

1962ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையில் இடம்பெற்ற Cuban Missile Crisis என்ற அணு ஆயுத முறுகல் நிலைக்கு பின் தற்போது அணு ஆயுத யுத்தம் ஒன்றுக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று வியாழன் கூறியுள்ளார். ரஷ்ய சனாதிபதி பூட்டினின் மிரட்டலையே பைடென் குறிப்பிட்டு உள்ளார்.

Democratic கட்சிக்கு பணம் வழங்குவோர் மத்தியில் பேசுகையில் பூட்டின் “not joking when he talks about the use of tactical nuclear weapons” என்று பைடென் கூறியுள்ளார்.

Tactical அணு ஆயுதங்கள் சிறிய அளவிலான அணு ஆயுதங்கள். இவை குறைந்த அழிவை ஏற்படுத்தினாலும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கும்.

கடந்த 8 மாதங்களாக பூட்டின் பாரிய அளவிலான வெற்றியை அடையாத நிலையில் அவர் சிறிய வகை அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா கணிக்கிறது.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜப்பானை சாதாரண யுத்தத்தில் வெல்ல முடியாத நிலையிலேயே அமெரிக்கா இரண்டு அணு குண்டுகளை வீசி யுத்தத்தை வென்று இருந்தது. அதை அண்மையில் சுட்டி காட்டிய பூட்டின் ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களை ஒரு முன்மாதிரி என்று குறிப்பிட்டு இருந்தார்.