தாய்லாந்தில் 38 பேர் சுட்டு, வெட்டி கொலை, 22 பேர் சிறுவர்

தாய்லாந்தில் 38 பேர் சுட்டு, வெட்டி கொலை, 22 பேர் சிறுவர்

தாய்லாந்தின் தலைநகர் Bangkok க்கு வடகிழக்கே சுமார் 500 km தொலைவில் உள்ள Uthai Sawan என்ற இடத்தில் முன்னாள் போலீஸ் ஒருவன் 38 பேரை சுட்டு அல்லது வெட்டி கொலை செய்துள்ளான். அதில் 22 பேர் சிறுவர்கள். தாக்குதலின் பின் வீடு சென்ற Panya Khamrab என்ற கொலையாளி தனது மனைவியையும், பிள்ளையையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளான்.

போதை பாவனை காரணமாக கடந்த ஆண்டு போலீஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இவன் மீது வழக்குகள் தொடர்கின்றன. சம்பவ தினத்தன்றும் இவன் நீதிமன்றம் சென்றுள்ளான்.

நீதிமன்ற பயணத்தின் பின் தனது பிள்ளையின் பராமரிப்பு (daycare) நிலையம் சென்ற இவன் அங்கு தனது பிள்ளையை காணாத காரணத்தால் கொலைகளை ஆரம்பித்து உள்ளான்.

அப்பகுதியில் இடம்பெற்ற கடும் மழை காரணமாக சுமார் 30 சிறுவர்கள் மட்டுமே அந்த பராமரிப்பு நிலையத்தில் சம்பவ வேளையில் இருந்துள்ளனர்.

கொலையாளியின் 9mm வகை கைத்துப்பாக்கி சட்டப்படியாக கொள்வனவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.