Baltic கடலின் கீழே செல்லும் Nord Stream என்ற மெதேன் வாயு குழாயில் இருந்து மெதேன் கசிய ஆரம்பித்துள்ளது. இந்த கசிவுக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று மேற்கு நம்புகிறது.
பழைய Nord Stream 1 என்ற குழாயும், புதிய Nord Stream 2 என்ற குழாயும் ரஷ்யாவின் எரிவாயுவை ஐரோப்பா எடுத்துவர Baltic கடல் அடியில் பாதிக்கப்பட்டவை. யூகிரைன் யுத்தத்தின் பின் ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு கொள்வனவு செய்வதை தவிர்த்து அல்லது குறைத்து உள்ளது.
இந்த குழாய்கள் மூலம் முழு அளவில் எரிவாயு செலவில்லை என்றாலும், இவற்றில் எரிவாயு நிரம்பி உள்ளது. அவ்வாறு நிரம்பி உள்ள எரிவாயு வெடிப்பு காரணமாக கசிகிறது.
சுவீடனின் Uppsala பல்கலைக்கழகத்தின் The National Seismology Centre தாம் திங்கள் காலை ஒரு தடவையும், பின் மாலை ஒரு தடவையுமாக இரண்டு வெடிப்பு அதிர்வுகளை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த வெடிப்புகள் Bornholm தீவுக்கு அருகே இடம்பெற்றதாக கூறியுள்ளனர்.
மொத்தம் 3 வெடிப்புகள் ஒரே இடத்தில் இடம்பெற்றதால் இவை நாசவேலைகள் அல்ல என்று கூறமுடியாது என்று கூறுகிறார் அந்நாட்டு பிரதமர் Mette Frederiksen.
மெதேன் ஓர் ஆபத்தான வாயு அல்ல. இது ஓரளவு நீரில் கலக்கும் தன்மை கொண்டது. இந்த குழாய்கள் 80 முதல் 110 மீட்டர் ஆழத்தில் உள்ளதால், கசியும் வாயு பெருமளவில் நீரில் கலந்துவிடும். வளியில் கலக்கையிலேயே மெதேன் வாயு எரியும்.