அண்மையில் இடம்பெற்ற பிரித்தானிய இராணி எலிசபெத்தின் மரண சடங்குகளில் பங்கு கொள்ள தவறிய இந்திய பிரதமர் மோதி முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபேயின் (Shinzo Abe) மரண சடங்குகளில் பங்கு கொள்ள உள்ளார்.
இராணியின் மரண சடங்குகளுக்கு இந்தியா சார்பில் இந்தியாவின் சம்பிரதாய சனாதிபதியான Droupadi Murmu மட்டுமே சென்று இருந்தார்.
இந்தியா Commonwealth நாடுகளில் அதிக சனத்தொகை கொண்ட நாடு என்பதுவும், இராணி Commonwealth நாடுகளின் தலைவி என்பதுவும் இங்கு குறிப்பிடல் தகும்.
செப்டம்பர் 27ம் திகதி இடம்பெறவுள்ள அபேயின் மரண சடங்குகளில் மோதி பங்கு கொள்வார் என்பதை இந்திய அரசு இன்று வியாழன் அறிவித்துள்ளது. அங்கு செல்லும் மோதி கூடவே ஜப்பானின் தற்போதைய பிரதமரையும் சந்திப்பார்.
அண்மையில் இடம்பெற்ற சீனா தலைமையிலான Shanghai Cooperation Organization அமர்வுக்கும் மோதி சென்று இருந்தார்.