​VoA: தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை பின் தள்ளுகிறது

​VoA: தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை பின் தள்ளுகிறது

நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற Special Competitive Studies Project (SCSP) என்ற வல்லுனர்களின் அமர்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை குறிப்பிடும் Voice of America (VoA) செய்தி சேவை சீனா தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவை வேகமாக பின் தள்ளுகிறது என்று கூறியுள்ளது.

முன்னாள் Google நிறுவன CEO Eric Schmidt தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வு 2030ம் ஆண்டுவரை அமெரிக்கா தொழில்நுட்பத்தில் பிரதான ஆளுமையை கொண்டிருக்க வழிகளை ஆராய்கிறது.

சீனா தொழில்நுட்ப ஆளுமையை பெற்றால் பல டிரில்லியன் வருமானத்தை அமெரிக்கா இழக்க, சீனா அவற்றை பெறும் என்று எச்சரிக்கிறது மேற்படி அமர்வு. அத்துடன் சீனாவின் அரசு மற்றைய நாடுகளில் தனது ஆளுமையையும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan மேற்படி உண்மையை பைடென் அரசு அறியும் என்றும், சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த தாம் முடிந்ததை செய்வதாகவும் கூறியுள்ளார். சீனா அளவற்ற முதலீடுகளை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு செலவழிப்பதை சுட்டிக்காட்டிய Sullivan அமெரிக்காவின் அண்மைய CHIPS Act என்ற திட்டத்தையும் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் பைடென் அரசு நடைமுறை செய்த CHIPS Act சட்டம் $50 பில்லியன் செலவில் அமெரிக்காவில் microchip தாயரிப்பு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க உள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் H. R. McMaster தனது உரையில் அமெரிக்காவின் தொழிநுட்ப வளர்ச்சி வேகம் போதியது அல்ல என்று கூறியுள்ளார்.

சீனா ஏற்கனவே 5G தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவை பின் தள்ளி உள்ளது. அமெரிக்காவின் தடைகளின் மத்தியிலும் Huawei 5G தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து உள்ளது.

Huntsman என்ற அமெரிக்காவின் Ford கார் நிறுவனத்தின் vice chairperson தனது கூற்றில் சீனாவின் electric கார் வளர்ச்சி அமெரிக்காவிலும் குறைந்தது 5 ஆண்டுகள் முன்னே உள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன் சீனாவுடனான தொடர்பை துண்டிப்பதும் (decoupling) புத்திசாலித்தனம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.