சீனாவின் Changsha நகரில் உள்ள 42 மாடிகளை கொண்ட அலுவலக கட்டிடம் ஒன்று இன்று வெள்ளி எரிந்துள்ளது. தீ விபத்து பாரதூரமானது என்றாலும் உயிர் பலி எதுவும் இடம்பெற்றதாக இதுவரை அறியப்படவில்லை.
சுமார் 218 மீட்டர் (715 அடி) உயரம் கொண்ட இந்த கட்டிடம் 2000ம் ஆண்டில் பாவனைக்கு வந்திருந்தது. இந்த கடிதத்தில் China Telecom என்ற தொலைத்தொடர்பு நிறுவனமே நிலைகொண்டிருந்தது.
தீ உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் தணிக்கப்பட்டு உள்ளது. தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
சுமார் 10 மில்லியன் மக்களை கொண்ட இந்த நகரம் Hunan மாநிலத்தின் தலைநகர்.