ரஷ்யாவின் யுகிரைன் யுத்தம் தொடர்பாக சீன சனாதிபதி கவலை (concern) கொண்டுள்ளதுடன் கேள்விகளையும் முன்வைத்துள்ளார் என்று இன்று வியாழன் ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். ஆனாலும் சீனாவின் நடுநிலைமை கொள்கையை பூட்டின் பாராட்டி உள்ளார்.
இவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் Shanghai Cooperation Organization (SCO) அமர்வில் சந்திக்கிறார்கள். இந்திய பிரதமரும் இந்த அமர்வுக்கு செல்கிறார்.
“யுகிரைன் விசயத்தில் சீனா கொண்டுள்ள நடுநிலைமை கொள்கையை நாம் உயர்வாக மதிக்கிறோம்” என்று சீன சனாதிபதி சீக்கு கூறியுள்ளார் பூட்டின்.
சீனா தொடர்ந்தும் ரஷ்யாவுடன் இணைந்து உலக நலனுக்காக செயற்படும் என்று சீயும் பூட்டினுக்கு கூறியுள்ளார். பதிலுக்கு பூட்டினும் தாய்வான் உள்ளடங்கிய “One China” கொள்கையை உறுதி செய்துள்ளார்.
ரஷ்யா யுகிறேனுள் நுழைய இரண்டு கிழமைகளுக்கு முன் சந்தித்த பூட்டினும், சீயும் தமது நட்புக்கு எல்லை இல்லை (no limit) என்று கூறியிருந்தனர்.
இந்த விசயத்தில் சீனாவின் கொள்கையை ஏற்காத அமெரிக்கா சீனா ரஷ்யாவை கண்டிக்கவேண்டும் என்றுள்ளது.