இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட அஜர்பைஜான் (Azerbaijan), கிறீஸ்தவ பெரும்பான்மை ஆர்மீனியாவுக்கும் (Armenia) இடையில் இடம்பெற்ற மோதலுக்கு ஆர்மீனியா தரப்பில் சுமார் 50 படையினர் பலியாகி உள்ளனர். 2020ம் ஆண்டு இடம்பெற்ற மோதலுக்கு பின் அதிக அளவு படையினர் தற்போதைய மோதலுக்கு பலியாகி உள்ளனர்.
ஆர்மினியா தனது படைகளில் குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளது. சுமார் 50 Azeri படையினர் பலியாகி உள்ளதாக அஜர்பைஜான் படை கூறியுள்ளது.
ரஷ்யாவின் பூட்டின் இரு தரப்பையும் அமைதி கொள்ளுமாறு கேட்டுள்ளார். அஜர்பைஜானும், ஆர்மீனியாவும் முன்னாள் சோவியத் நாடுகள். இந்த இரண்டு நாடுகளின் எல்லையில் 2020ம் ஆண்டு சண்டைக்கு பின் ரஷ்ய சமாதான படைகள் நிலை கொண்டுள்ளன. 202ம் ஆண்டு சண்டைக்கு சுமார் 6,600 பேர் பலியாகி இருந்தனர்.
தற்போது யுகிரைனில் புதைந்துள்ள ரஷ்யா வேறு யுத்தங்களில் தலையிட முடியாது.
இஸ்லாமிய பெரும்பான்மை நாடான அஜர்பைஜான் அரசியல் மற்றும் கலாச்சாரப்படி துருக்கிக்கு நெருக்கமானது. அதனால் துருக்கியின் ஆதரவு இவர்களுக்கு உண்டு.
அஜர்பைஜான் எல்லைக்கு உள்ளே உள்ள Nagorno-Karabakh என்ற ஆர்மீனியர் நிறைந்த பகுதியே இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட காரணம். ஆனாலும் உலக நாடுகள் Nagorno-Karabakh பகுதியை அஜர்பைஜானின் அங்கமாகவே கொள்கின்றன. அதேவேளை அஜர்பைஜானின் மேற்கு பகுதி ஆர்மீனியாவுக்கு அப்பால் உள்ளது.