Google உள்ளே துரோகத்தனம், ஊழியர் பதவி விலகினார்

Google உள்ளே துரோகத்தனம், ஊழியர் பதவி விலகினார்

Ariel Koren என்ற Google ஊழியர் அவர் மீது Google செலுத்திய துரோகத்தனம் காரணமாக பதவி விலகி உள்ளார்.

அமெரிக்காவின் Google, Amazon ஆகிய இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் இஸ்ரேலின் இராணுவத்துடன் இணைந்து $1.2 பில்லியன் செலவில் Project Nimbus என்ற திட்டத்தில் இயங்கி வருகின்றன. Artificial intelligence நிறைந்த இந்த தொழில்நுட்ப வேலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு மிகவும் பாதகமானது.

இவ்வாறு ஒரு இனத்துக்கு பாதகமான திட்டத்தில் Google இணைவது துரோகத்தனம் என்று கூறும் Google ஊழியரான Ariel Koren Google தலைமையால் தண்டிக்கப்பட்டார். அந்த தண்டனை இடமாற்றம் ஒன்று மூலமே நடைமுறை செய்யப்பட்டது. அமெரிக்காவின் San Francisco நகரில் கடமையாற்றிய Ariel Koren திடீரென பிரேசிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தனது வேலைக்கு சம்பந்தம் இல்லாத முறையில் இடமாற்றம் செய்யப்பட்டதால் Ariel பதவி விலகி உள்ளார்.

பலஸ்தீனருக்காக குரல் கொடுக்கும் Ariel ஒரு யூத பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 7 ஆண்டுகளாக Google நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். Ariel மட்டுமன்றி குறைந்தது 15 பலஸ்தீன ஊழியர்கள் தாம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கருத்து கூறும் வேளையில் Google தம்மை மிரட்டுவதாக கூறியுள்ளனர்.

மற்றவருக்கு நீதி, நியாயம் கற்பிக்கும் Google தான் மட்டும் அந்த நீதி, நியாயங்களை கடைப்பிடிக்க தவறுகிறது.