பிரித்தானிய பெண்ணை ISIS குழுவுக்கு வழங்கிய கனடிய உளவுப்படை

பிரித்தானிய பெண்ணை ISIS குழுவுக்கு வழங்கிய கனடிய உளவுப்படை

Shamima Begum என்ற பிரித்தானிய பெண்ணை, அவளின் 15 வயதில், CSIS (Canadian Security and Intelligence Service) என்ற கனடிய உளவுப்படை உறுப்பினன் ஒருவன் சிரியாவுக்கு அழைத்து சென்று ISIS குழுவுக்கு வழங்கி உள்ளான் என்கிறது நாளை வியாழன் வெளிவரவுள்ள புத்தகம் ஒன்று. இந்த செய்தியை மூடி மறைக்க முனைகிறார் கனடிய பிரதமர் Justin Trudeau.

பிரித்தானிய எழுத்தாளரான Richard Kerbaj எழுதும் The Secret History of the Five Eyes என்ற புத்தகமே இந்த உண்மையை பகிரங்கம் செய்கிறது.

Shamima Begum மட்டுமன்றி Kadiza Sultana என்ற அவளின் 16 வயது தோழி, Amira Abase என்ற 15 வயது தோழி ஆகியோரையும் மேற்படி CSIS உறுப்பினன் ISIS குழுவுக்கு வழங்கி உள்ளான் என்றும் கூறப்படுகிறது.

மூன்று சிறுமிகளை ISIS அமைப்புக்கு வழங்கியது மட்டுமன்றி அந்த உண்மையை கனடாவின் CSIS அமைப்புக்கு கூறியும் உள்ளான்.

இதற்கு பதிலளித்த கனடிய பிரதமர் கனடிய உளவுப்படை “to be flexible and to be creative in their approaches” என்று கூறியுள்ளார்.

Mohammed Al Rasheed என்பவனே மேற்படி CSIS உறுப்பினன் என்றும் கூறப்பட்டு உள்ளது. தான் கடத்திய பெண்களின் கடவு சீட்டுகளை படம்பிடித்து CSIS அமைப்புக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது.

Sultana, Abase ஆகிய இரண்டு பெண்களும் ஏற்கனவே மரணமாகி உள்ளனர்.

தற்போது சிரியாவின் தடுப்பு முகாம் ஒன்றில் உள்ள 23 வயதை அடைந்த Begum பிரித்தானிய குடியுரிமை பறிக்கப்பட்டதால் பிரித்தானிய செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. அவளுக்கு 3 குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவை பின்னர் மரணமாகி உள்ளன.