செப்டம்பர் 1ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரஷ்யாவின் Vostok 2022 (East 2022) என்ற மிக பெரிய இராணுவ பயிற்சி இடம்பெறவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கேயும், ஜப்பான் கடலிலும் இந்த பயிற்சி இடம்பெறும்.
சீனா, இந்தியா, சிரியா, நிக்கராகுவா, லாவோஸ், மொங்கோலியா உட்பட பல முன்னாள் சோவியத் நாடுகளும் இந்த பயிற்சியில் பங்கு கொள்ளும். சீனா முழுமையாக பங்கு கொண்டாலும் இந்தியா அரை மனத்துடனேயே பங்கு கொள்கிறது.
ஜப்பான் கடலில் (Sea of Japan) இடம்பெறும் பயிற்சிகளில் இந்தியா பங்கு கொள்ளாது. ஜப்பானை பகைக்க விரும்பாமையே அதற்கு காரணம். அதேவேளை மேற்கையும் இந்தியா முழுமையாக பகைக்க விரும்பவில்லை.
இந்த பயிற்சியில் 50,000 படையினருடன் 140 யுத்த விமானங்கள், 60 யுத்த கப்பல்கள் ஆகியனவும் பங்கு கொள்ளும். சீன படையினர் ஏற்கனவே அங்கு சென்று உள்ளனர்.
2018ம் ஆண்டு இடம்பெற்ற Vostok 2018 பயிற்சியில் 300,000 ரஷ்ய படையினரும், 1,000 யுத்த விமானங்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யுகிரைன் யுத்தம் ரஷ்ய படைகளின் எண்ணிக்கை குறைய காரணமாகலாம்.