பாகிஸ்தானில் தற்போது பொழிந்துவரும் தென்மேற்கு பருவக்காற்று கால monsoon மழைக்கு சுமார் 1/3 பங்கு பாகிஸ்தான் வெள்ளத்துள் அமிழ்ந்து உள்ளது. அத்துடன் குறைந்தது 1,136 பேர் பலியாகியும் உள்ளனர்.
இந்த வெள்ளத்துக்கு சுமார் 3,475 km நீள வீதிகள் அழிந்தும், 157 பாலங்கள் உடைந்தும் உள்ளன. சுமார் 1 மில்லியன் வீடுகளும், குடிசைகளும் அழிந்தும், சுமார் 730,000 கால்நடைகள் மரணித்தும் உள்ளன.
இவர்களுக்கு துருக்கி, UAE, கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து உதவிகள் வர ஆரம்பித்து உள்ளன. பிரித்தானியா $1.8 மில்லியன் பணத்தை உணவு வழங்கலுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. ஐ. நாவும் உதவிகளை பெற ஆரம்பித்து உள்ளது.
சிந்து மாநிலத்தில் பெருமளவு நெல் பயிர்ச்செய்கை பாதிப்பு அடைந்து உள்ளது. இதனால் வரும் காலங்களில் அரிசி விலை அதிகரிக்கலாம்.
2010ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இவ்வகை பெருமழை பொழிந்து அழிவுகளை ஏற்படுத்தி இருந்தது.