ரஷ்ய சனாதிபதி பூட்டினின் நெருங்கிய நண்பரான Alexander Dugin னின் மகள் Darya Dugin சனிக்கிழமை கார் குண்டு வெடிப்பு ஒன்றுக்கு பலியாகி உள்ளார். பூட்டினின் நெருங்கிய நண்பனான தந்தைக்கு வைத்த குண்டுக்கே 29 வயதுடைய மகள் பலியாகி உள்ளதாக நம்பப்படுகிறது. தந்தை, மகள் இருவரும் பூட்டினின் யுக்ரைன் மீதான தாக்குதலை ஆதரிப்பவர்கள்.
அரசியல் பதவிகள் எதையும் கொண்டிராவிடினும் தந்தை Alexander அரசியலில் பூட்டினின் மூளை என்று வர்ணிக்கப்படுபவர். தந்தை ரஷ்ய தேசியத்தில் திடமான நாட்டம் கொண்டவர். இவர் கடுமையான மேற்கு எதிர்ப்பு கொள்கைகளையும் கொண்டவர்.
தந்தையும், மகளும் தலைநகர் மாஸ்கோவுக்கு அண்மையில் உள்ள Zakharovo இடத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற பாரம்பரியம் (Tradition) என்ற நிகழ்வு ஒன்றில் கலந்திருந்தனர்.
தந்தையும், மகளும் ஒன்றாகவே நிகழ்வை விட்டு நீங்குவர் என்று கருதிய தாக்குதல்காரர் கார் பயணிக்கையில் குண்டை வெடித்து உள்ளனர். ஆனால் மகள் மட்டுமே காரில் இருந்து குண்டுக்கு பலியாகி உள்ளார். Toyota Land Cruiser வகை காருக்கு கீழ் பொருத்தப்பட்டு இருந்த குண்டு Bolshiye Vyazemy என்ற கிராமத்துக்கு அருகே பயணிக்கையில் மாலை 9:30 மணியளவில் வெடித்து உள்ளது.
இது தமது செயல் அல்ல என்று யுகிரைன் மறுத்து உள்ளது.
அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏற்கனவே தந்தையையும், மகளையும் தடை செய்து இருந்தன.