பின்லாந்து நாட்டின் பிரதமர் Sanna Marin அண்மையில் இடம்பெற்ற party ஒன்றில் போதை தலைக்கு ஏறியவர் போல் கும்மாளம் போட்டிருந்தார் இருந்தார். அந்த வீடியோ தற்போது பகிரங்கத்துக்கு வந்ததால் அவர் போதைக்கான சோதனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சோதனை முடிவுகள் அடுத்த கிழமை வெளிவரும்.
அதேநேரம் Marin, வயது 36, தான் எந்தவித சட்டவிரோத போதைகளுக்கும் அடிமையாகவில்லை என்று கூறியுள்ளார். தற்போது மட்டுமன்றி தனது இளைய வயதிலும் சட்டவிரோத போதை உட்கொண்டிருக்கவில்லை என்கிறார் பிரதமர்.
ஆனாலும் ஒரு பிரதமர் நிதானமாக இருக்காமை பலரையும் வியக்க வைத்துள்ளது. குறிப்பாக எல்லையில் ரஷ்ய-யூகிரைன் யுத்தம் இடம்பெறும் நேரத்தில் பின்லாந்து தீடீரென இராணுவ, அரசியல் குழப்பத்துள் விழலாம். அந்நிலையில் பிரதமர் திடீர் தீர்மானங்கள் எடுக்க நேரிடும்.
ஆனாலும் பிரதமர் அலுவலக நேரம் தவிர்ந்த வேலையில் தான் எதையும் செய்யலாம் என்று வாதாடுகிறார் பிரதமர்.
கடந்த ஆண்டு கரோனா முடக்கம் அங்கு நடைமுறையில் இருக்கையில் இந்த பிரதமர் party க்கு சென்று இருந்தார். பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்.