அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முதல் படியாக ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்கள் இல்லாத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க உள்ளது.
சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட SLS ஏவுகணை ஏற்கனவே Kennedy ஏவு தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. மிக பாரமான இதை பொருத்தும் இடத்தில் இருந்து ஏவு தளத்துக்கு 3 மில்லியன் kg எடை கொண்ட crawler என்ற வாகனம் மணித்தியாலத்து 1.6 km வேகத்தில் எடுத்து சென்றுள்ளது. இந்த crawler வாகனமே 50 ஆண்டுகளுக்கும் முன்னரும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இம்முறை விண்வெளி வீரர்களுக்கு பதிலாக மனிதத்துக்கு நிகரான பொம்மைகள் பயணிக்கும். இந்த பொம்மைகளில் பல ஆயிரம் sensor கள் பொருத்தப்பட்டு தரவுகள் பெறப்படும்.
RS-25 வகை இயந்திரங்களை கொண்ட SLS ஏவுகணையானது Saturn V வகை ஏவுகணையிலும் 15% அதிக உந்தத்தை கொண்டது.
2024ம் ஆண்டு ஏவப்பட உள்ள Artemis 2 விண்வெளி வீரருடன், சந்திரனில் இறங்காது, சந்திரனின் விண்ணில் சுற்றி வலம் வரும்.
2025ம் ஆண்டு ஏவப்பட உள்ள Artemis 3 விண்வெளி வீரரை சந்திரனில் தரையிறக்கும்.