வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆப்கானிஸ்தானின் மட்சரிவுக்கு 2000 இக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில், சீன எல்லைக்கு அருகில் உள்ள Abi Barak என்ற கிராமத்தில் இது இடம்பெற்றுள்ளது.
300 குடும்பங்களை சார்ந்த 2100 இக்கும் அதிகமானோர் சரிவுக்குள் அகப்பட்டுள்ளதாக அப்பகுதி மாநில அரச பேச்சாளர் Naweed Frotan கூறியுள்ளார்.
சில இடங்களில் மட்சரிவு 90 அடி ஆழமாக உள்ளதாகவும், அதனடியில் அகப்பட்டவரை மீட்பது உள்ளூர் வசதிகளுக்கு இலகுவான விடயம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய தேடுதல் வேலைகள் கிராமத்தில் கிடைக்கக்கூடிய சாதாரண உபகரணங்களை கொண்டே நடாத்தப்படுகின்றன.
சில உதவி வழங்கும் நிறுவனங்கள் இவ்விடம் நோக்கி செல்கின்றன.