முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பின் Mar-a-Lago என்ற மாளிகை வீட்டில் இருந்து அமெரிக்க அரசுக்கு சொந்தமான 11 Top Secret ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்து உள்ளது. அனால் ரம்ப் அந்த ஆவணங்கள் declassified ஆவணங்கள் என்று கூறுகிறார்.
அமெரிக்க அரசுக்கு சொந்தமான இரகசிய ஆவணங்களை பதவியில் உள்ள சனாதிபதியும், அனுமதி கொண்ட உயர் அதிகாரிகளும் பார்வை இடலாம். ஆனால் அவற்றை அவர்கள் தமது வீட்டுக்கு எடுத்து செல்வது குற்றம். இச்செயல் Espionage Act சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெறும். அதனால் ரம்ப் 2024ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தடுக்கப்படலாம்.
Top Secret ஆவணங்கள் பகிரங்கத்து வந்தால் அல்லது எதிரியின் கையை எட்டினால் அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகமாகும்.
கடந்த திங்கள் நீதிமன்ற அனுமதியுடன் ரம்பின் வீடு சென்ற FBI உறுப்பினர் மொத்தம் 20 பெட்டிகளில் ரம்ப் சட்டவிரோதமாக எடுத்து சென்ற ஆவணங்களை மீட்டு இருந்தனர்.
அந்த ஆவணங்களில் ஒன்று பிரெஞ்சு நாட்டின் சனாதிபதி மக்கிரான் தொடர்பானது. ஆனால் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
தேடுதலுக்கு உள்ளன Mar-a-Lago என்ற மேற்படி ரம்பின் மாளிகையில் சுமார் 58 அறைகளும், 33 மலசல கூடங்களும் உண்டு. இது 17 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.