David Jolly, Christine Whitman ஆகிய Republican கட்சி உறுப்பினர்களும் Andrew Yang என்ற Democratic கட்சி உறுப்பினரும் இணைந்து Forward என்ற மூன்றாம் கட்சியை உருவாக்கி உள்ளனர்.
கடும் போக்கு வலதுசாரி கட்சியான Republican கட்சியும், கடும் போக்கு இடதுசாரி கட்சியான Democratic கட்சியும் அமெரிக்காவை துண்டாடுகின்றன என்பதே Forward கட்சியின் முறைப்பாடு. Forward கட்சி இடதோ அல்லது வலதோ இல்லாமல் மத்திய கொள்கைகளை கொண்டிருக்கும் என்று Forward கூறுகிறது.
Andrew Yang கடந்த அமெரிக்க சனாதிபதி தேர்தலில் Democratic கட்சி சார்பில் போட்டியிட கட்சிக்குள் போட்டியிட்டு இருந்தவர். பின்னர் நியூ யார்க் நகரின் நகர தலைவர் பதவிக்கும் போட்டியிட்டு தோற்று இருந்தவர்.
அமெரிக்காவில் 62% மக்கள் மூன்றாம் கட்சி ஒன்றை விரும்புவதாக Andrew Yang கூறியுள்ளார்.
Forward கட்சி தனது முதலாவது மாநாட்டை 2024ம் ஆண்டு கோடை காலத்தில் கொண்டிருக்கும் என்றும், அந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வேறு பல காட்சிகள் மூன்றாம் கட்சியாக வளர முன்னர் முனைந்து இருந்தாலும் அவை தமது முயற்சியில் தோற்று இருந்தன. Forward கட்சி வெற்றி கொள்ளுமா என்பதை பொறுத்து இருந்தான் பார்க்கவேண்டும்.