சீனாவின் நடுவே செல்லும் Yangtze ஆற்றில் இருந்து தலைநகர் பெய்ஜிங்குக்கு நீர் எடுத்து செல்ல சுமார் $8.9 பில்லியன் செலவில் மிக பெரியதோர் திட்டம் நடைமுறை செய்யப்படவுள்ளது. இந்த திட்ட கட்டுமானம் நிறைவுபெற சுமார் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
உலகத்திலேயே மிக பெரிய நீர் அணைக்கட்டு Yangtze ஆற்றை மறித்து கட்டப்பட்ட Three Gorges Dam ஆகும். இந்த அணையில் தேங்கி இருக்கும் நீரே சுமார் 1,400 km வடக்கே உள்ள தலைநகர் பெய்ஜிங்குக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக சுமார் 1,000 மீட்டர் வரை ஆழம் கொண்ட 194.8 மீட்டர் நீள நிலக்கீழ் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. கட்டுமானத்தின் பின் Yinjianbuhan என்ற இந்த சுரங்க நீர் பாதையே உலகத்தில் மிக நீள நீர் சுரங்கமாக இருக்கும்.
தற்போது பின்லாந்தில் (Finland) உள்ள Paijanne என்ற நிலக்கீழ் நீர் சுரங்கமே மிக நீளமானது. இது 120 மீட்டர் நீளம் கொண்டது. அத்துடன் இது 130 மீட்டர் வரை ஆழம் கொண்டது.
Yinjianbuhan நிலக்கீழ் சுரங்கம் Yangtze நீரை Han ஆற்றுக்குள் செலுத்தும். பின் அந்த நீர் Danjiankou நீர் தேக்கத்தை அடையும். அங்கிருந்து கால்வாய் மூலம் நீர் தலைநகருக்கு செல்லும்.