இஸ்தான்புல்லில் Eurasia சுரங்கம்

Eurasia

Eurasia சுரங்க வேலைகள் இன்று துருக்கி பிரதமரால் ஆரம்பிக்கப்பட்டன. துருக்கியின் நகரமான இஸ்தான்புல்லூடாக சென்று கருங்கடலை அடையும் Bosphorus நீரிணைக்கு கீழாக இந்த வாகன போக்குவரத்துக்கான சுரங்கம் அமைகிறது. இந்த சுரங்கம் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைப்பதால் Eurasia என பெயர் இடப்பட்டுள்ளது. 2016 இன் இறுதியில் இவ்வேலைகள் முற்றுபெறும் என கூறப்படுகிறது.

கிழக்கு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தட்டும், மேற்கு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தட்டுமாக மொத்தம் இரண்டு தட்டுக்களை இந்த சுரங்கம் கொண்டிருக்கும். இதன் ஊடாக நாள் ஒன்றுக்கு சுமார் 90,000 வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனங்கள் சுமார் சுமார் $5.00 ஐ கட்டணமாக செலுத்தும். இந்த சுரங்கத்தின் மொத்த கட்டுமான செலவு சுமார் $2 பில்லியன். உண்மையில் சில கட்டுமான வேலைகள் 2011 இல் ஆரம்பமாகிவிட்டன.

சுரங்கத்தின் மொத்த நீளம் 5.4 km ஆகும். இதன் பயன்படக்கூடிய உள் விட்டம் 12 மீட்டர் ஆகவும், சுரங்க சுவர்களின் தடிப்பு சுமார் 60 cm ஆகவும் இருக்கும். சுரங்கத்தின் அதி ஆழமான பகுதி கடல் மட்டத்தில் இருந்து 106 மீட்டர் ஆழத்திலும், கடலின் அடியில் இருந்து 61 மீட்டர் ஆழத்திலும் இருக்கும்.