2013 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வர்த்தகம் (ஏற்றுமதி+இறக்குமதி) முதல் தடவையாக அமெரிக்காவை விட அதிகமாகி, இதுவரை முதலாவதாக இருந்து வந்த அமெரிக்காவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி உள்ளது என்கிறது World Trade Organization (WTO) தரவுகள். சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த ஏற்றுமதி $2.21 ட்ரில்லியன். இது 2012 ஆம் ஆண்டைவிட 8% அதிகம். அதேவேளை சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த இறக்குமதி $1.95 ட்ரில்லியன், இது 2012 ஆம் ஆண்டிலும் 7% அதிகம். அதன்படி சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $4.16 ட்ரில்லியன்.
அதேவேளை இரண்டாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்ட அமெரிக்காவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $3.91 ட்ரில்லியன் மட்டுமே.
மூன்றாம் இடத்தில் உள்ள ஜேர்மனின் 2013 ஆம் ஆண்டுக்கான வர்த்தகம் $2.64 ட்ரில்லியன். நாலாம் இடத்தில் உள்ள ஜப்பானின் வர்த்தகம் $1.55 ட்ரில்லியன்.