சீனா Boeing என்ற அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனத்தை முற்றாக புறக்கணித்து, Airbus என்ற ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சுமார் 300 பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்கிறது.
அமெரிக்கா புறக்கணிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் தற்போது நிலவும் அரசியல் முறுகல் நிலையே காரணம் என்று கவலை தெரிவித்து உள்ளது Boeing.
Air China விமான சேவையும், China Southern Airlines விமான சேவையும் தலா 96 விமானங்களாக மொத்தம் 192 Airbus A320 Neo விமானங்களை $12.2 பில்லியனுக்கு கொள்வனவு செய்கின்றன. China Eastern Airlines 100 பயணிகள் விமானங்களை $12.8 பில்லியனுக்கு கொள்வனவு செய்கிறது.
வழமையாக சீனா ஐரோப்பிய Airbus, அமெரிக்க Boeing ஆகிய இரண்டிடம் இருந்தும் சம அளவில் விமானங்களை கொள்வனவு செய்யும். ஆனால் தற்போதை முறுகல் நிலை ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக அமைந்து உள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் Boeing ஒரு புதிய விமானத்தை மட்டுமே சீனாவுக்கு அனுப்பி உள்ளது. அதேவேளை Airbus மொத்தம் 47 புதிய விமானங்களை அனுப்பி உள்ளது.
அமெரிக்கா தாய்வானை தூண்டுவதும் சீனாவை விசனத்துக்கு காரணம்.