சீனாவின் ShenZhou 14 என்ற கலம் உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 10:44 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இரண்டு ஆண் விண்வெளி வீரரும், ஒரு பெண் வீரரும் இதில் பயணிக்கின்றனர். இவர்கள் 6 மாதங்கள் TianGong என்ற சீன விண் ஆய்வுகூடத்தில் தங்கியிருந்து TianGong கட்டுமான பணியை செய்வர். இது வீரர்களை கவி செல்லும் மூன்றாவது பயணமாகும்.
TianGong பல துண்டங்களாக சீனாவில் செய்யப்பட்டு, ஏவுகணைகள் மூலம் ஏவி, வானத்தில் வைத்து பொருத்தப்படுகிறது. ஏற்கனவே பல பாகங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இம்முறை பயணிக்கும் வீரர் ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஏவப்படவுள்ள WenTian, MengTian ஆகிய இரண்டு ஆய்வு கூடங்களை TianGong உடன் இணைப்பர்.
தற்போது சேவையில் இருப்பது அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த International Space Station (ISS) மட்டுமே. இந்த ஆண்டின் இறுதிக்குள் சீனாவின் TianGong முழுமையாக சேவைக்கு வரும்.
அமெரிக்கா ISS திட்டத்தில் சீனாவின் பங்களிப்பை தடுத்ததாலேயே சீனா சுயமாக விண் ஆய்வு கூடம் தயாரிக்கும் பணியில் இறங்கியது. அமெரிக்க சட்டம் நாசா சீனாவுடன் இணைந்து விண் ஆய்வுகளில் ஈடுபடுவதை தடுக்கிறது.