இந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற அஸ்ரேலிய பொது தேர்தலில் Holt என்ற தொகுதியில் வென்ற Cassandra Fernando என்பவரும் (Labor கட்சி), இரண்டாம் இடத்தை அடைந்து தோற்ற Ranj Perera என்பவரும் (Liberal கட்சி) இலங்கையில் பிறந்தவர்களே. அத்துடன் ரவி ரகுபதி என்பவர் சுயேற்சையாக போட்டியிட்டு 6ம் இடத்தை அடைந்து உள்ளார்.
Cassandra 29,220 வாக்குகளை (41.8%) பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார். இவர் 1999ம் ஆண்டு தனது 11 வயதில் பெற்றாருடன் இலங்கையில் இருந்து அஸ்ரேலியா சென்றவர்.
Ranj 20,624 வாக்குகளை (29.5%) பெற்று உள்ளார். கொழும்பில் பிறந்த Ranj தனது 15ம் வயதில் அஸ்ரேலியா சென்றுள்ளார். இவர் அங்குள்ள Multicultural Affairs அமைச்சர் Jason Wood என்பவரின் Chief of Staff ஆக பதவி வகுத்தவர்.
Ravi 2,038 வாக்குகளை (2.9%) பெற்று உள்ளார். ரவி Australia Indian Business Organization என்ற அமைப்பை ஆரம்பித்தவர்.
Holt தொகுதி Melbourne நகருக்கு அண்மையில் உள்ள தொகுதி.