அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள Buffalo நகரில் உள்ள பெரிய கடை ஒன்றில் (TOPS supermarket) சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 10 பலியாகியும், 3 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 18 வயதுடைய வெள்ளை இனத்தவர் என்றும், பலியான அல்லது காயமடைந்த 13 பேரில் 11 பேர் கருப்பு இனத்தவர் என்றும் கூறப்படுகிறது. ஏனைய இருவரும் வெள்ளை இனத்தவர்.
சுட்டவர் சுடும் நிகழ்வை இணயத்தில் நேரடியாக ஒளிபரப்பியும் உள்ளார். இவர் தன்னை பாதுகாக்க இராணுவ வகை கவச உடைகளுடன் இருந்துள்ளார்.
சூடு நிகழ்ந்த இடம் கருப்பர் பெருமளவில் வாழும் இடம். அவ்விடத்தில் வாழாத சுட்டவர் பல மணிநேரம் பயணித்த சுட்ட இடத்துக்கு வந்துள்ளா