பாலஸ்தீனியர் ஐ.நா. நோக்கி நகர்வு, அதை தண்டிக்கும் அமெரிக்கா

UN_Israel_Palestinian

இஸ்ரவேலும் பாலஸ்தீனியர் விடயத்தில் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவும் பாலஸ்தீனியரிடம் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டுமே: பாலஸ்தீனியர் பேச்சுவார்த்தை எத்தனை சந்ததிகளுக்கு இழுத்தடிக்கப்பட்டாலும், இஸ்ரவேலுடனும் அமெரிக்காவுடனும் மட்டுமே பாலஸ்தீனியர் தமது அரசியல் விடயங்கள் பற்றி பேசவேண்டும். குறிப்பாக பாலஸ்தீனியர் தமது விடயத்தை ஐ.நா. எடுத்து செல்வது இஸ்ரவேலையும் அமெரிக்காவையும் ஆத்திரம் அடைய செய்யும். ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்பட்டது பாலஸ்தீனியரின் தலைமை அதையே இன்று செய்துள்ளது.

ஐ.நா. வின் 15 சபைகளில் உறுப்பினராக இணைவதற்கு பாலஸ்தீனியர் கையொப்பம் இட்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் பாலஸ்தீனியர் ஐ.நா.வின் பாதுகாப்பை அடைய முயல்கின்றனர். பொதுவாக இந்த 15 அமைப்புக்களும் முக்கியத்துவம் குறைந்தன என்றாலும் ஏனைய அமைப்புக்களை அடைய இந்த 15ம் வழி அமைக்கலாம். ஐ.நா.வில் சுமார் 63 அமைப்புக்கள் உண்டு.

பாலஸ்தீனரின் இந்த நடவடிக்கையை தண்டிக்கும் முகமாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் John Kerry நாளை புதன் இடம்பெறவிருந்த  பாலஸ்தீனியரின் தலைவர் அபாஸ் உடனான சந்திப்பை இரத்து செய்துள்ளார். பாலஸ்தீனியருக்கான உதவிகளையும் நிறுத்தப்போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது.