உலகின் தற்போதைய முதலாவது செல்வந்தரான Elon Musk மொத்தம் $44 பில்லியன் பணத்துக்கு Twitter நிறுவனத்தை கொள்வனவு செய்ய இணங்கியதற்கு அடுத்த நாளான இன்று செவ்வாய் அவரின் Tesla என்ற மின்சக்தியில் இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு சந்தை பெறுமதி $125 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
Twitter கொள்வனவுக்கு Musk $44 பில்லியன் பணம் வழங்க முந்தாலும், தான் $21 பில்லியன் பணத்தை செலுத்த உள்ளதாகவும் மிகுதியை வங்கி கடன் மூலம் செலுத்த உள்ளதாகவும் கூறி இருந்தார்.
அவரின் பாங்கான $21 பில்லியனை பெற அவர் தன்னிடம் உள்ள Tesla பங்குகளை விற்பனை செய்தல் வேண்டும். அதாவது Musk Tesla நிறுவனத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்ததாலேயே Twitter மீது நாட்டம் கொண்டுள்ளார் என்று கருத வைத்துள்ளது. அதுவே Tesla பங்கு வீழ்ச்சி அடைய காரணம்.
அத்துடன் Twitter தாறுமாறாக சீனாவை சாட, சீனாவில் பெரிய வர்த்தகத்தை கொண்டுள்ள Tesla மீது சீனா தண்டனைகளை விதிக்கலாம் என்றும் கருத இடமுண்டு. செல்வந்தர் அதிகரித்துவரும் சீனா Tesla வுக்கு பிரதான சந்தை.
Musk கின் Twitter கொள்வனவு முயற்சி அவரின் அழிவுக்கு ஆரம்பமாக அமையலாம். Tesla விற்பனை செய்யப்படும் பல நாடுகளில் Twitter ஒரு விரோதி. Twitter மீதான வெறுப்பு Tesla மீது தண்டனையாக அமையலாம்.