கடன் அடைத்தலை நிறுத்துகிறது இலங்கை

கடன் அடைத்தலை நிறுத்துகிறது இலங்கை

அரச bond கடன் அடைத்தலை நிறுத்துகிறது என்று இன்று செய்வாய் இலங்கை அரசு கூறியுள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய தேவையான பணம் இல்லாத நிலையில் கடன்களை அடைப்பது தொடர்பாக அக்கறை கொள்ள முடியாது என்கிறது இலங்கை அரசு.

அரசின் இந்த முடிவு ஓரளவுக்கு நியாயமானதாகவே கருதப்படுகிறது. கையிருப்பில் உள்ள பணத்தில் ஒருபகுதி கடனை அடைத்து பின் மிகுதி கடனில் முறிவதுடன் ஒப்பிடுகையில் மொத்த கடனுக்கும் முறிவதே புத்திசாலித்தனம். வெள்ளைக்கொடி தூக்குவது உறுதி என்றால் முடிந்த அளவு விரைவாக தூக்குவது மேலதிக அழிவுகளை குறைக்கும்.

“நாங்கள் அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதில் மட்டுமே கண்ணாக இருக்க வேண்டும் என்றும் அரச கடன்களில் அல்ல” என்று கூறியுள்ளார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் Nandalal Weerasinghe. கடனை அடைக்கக்கூடியது முடிந்த காரியம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

 அரசின் இந்த தீர்மானத்தால் கடன் வழங்கியோர் ஒன்று கூடி கடனை மீளப்பெற புதிய வழிகளுக்கு இணங்க தள்ளப்பட்டுள்ளார். இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குதல், வட்டியை குறைதல், முதலை குறைதல் ஆக பல தீர்மானங்கள் எடுக்கப்படலாம்.

பதிலுக்கு IMF இலங்கை மீது பல புதிய நெருக்கடிகளையும் திணிக்கலாம்.