இலங்கை சனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ வதிவிடத்தை ஆர்பாட்டக்காரர் இன்று வியாழன் இரவு முற்றுகை இட்டு உள்ளனர். பலர் கல் போன்ற பொருட்களை வீசி வன்முறையில் ஈடுபட்டும் உள்ளனர். அதனால் கொழும்பின் பல பகுதிகள் மறு அறிவிதல்வரை ஊரடங்கு சட்டத்தில் உள்ளன.
Go home Gota, Gota is a dictator என்றெல்லாம் ஆர்பாட்டக்காரர் குரல் கொடுத்து உள்ளனர். குறைந்தது ஒரு பாதுகாப்பு படையின் பஸ் தீயிடப்பட்டு உள்ளது.
கொழும்பு வடக்கு, மத்தி, தெற்கு, களனி, நுகேகொட பகுதிகளே ஊரடங்கில் உள்ளன.
Pengiriwatte Road பகுதியில் பெருமளவு ஆர்பாட்டக்காரர் குவிந்து உள்ளனர். இங்கேயே சனாதிபதி கோத்தபாயாவின் private குடியிருப்பு உண்டு.
மருதானையில் STF போலீசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களுக்கு 6 பேர் காயமடைந்து உள்ளனர்.இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேர் கொழும்பு தெற்கு கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கண்டி-கொழும்பு வீதி Bulugaha என்ற இடத்தில் தீயிடல் மூலம் மறிக்கப்பட்டு உள்ளது.