அமெரிக்கா யுக்கிரைன் செல்வது WW III ஆகும், என்கிறார் பைடென்

அமெரிக்கா  யுக்கிரைன் செல்வது WW III ஆகும், என்கிறார் பைடென்

அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ யுக்கிரைன-ரஷ்யா யுத்தத்தில் பங்கெடுப்பது மூன்றாம் உலக யுத்தமாகும் என்று கூறியுள்ளார் அமெரிக்க சனாதிபதி பைடென்.

அதனால் அமெரிக்க அல்லது நேட்டோ படைகள் யுக்கிரைன் யுத்தத்தில் பங்கெடுக்க என்று பைடென் திடமாக கூறியுள்ளார். அது மட்டுமன்றி அமெரிக்கா யுக்கிரைன் மீது no-fly zone உருவாக்கி ரஷ்ய யுத்த விமானங்களையும் தடுக்காது என்றும் பைடென் கூறியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை Philadelphia நகரில் தனது கட்சி ஆதரவாளர் மத்தியில் பேசுகையிலேயே பைடென் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக போராடும் சிறிய யுக்கிரைன் தோல்வி காண்பது தவிர்க்க முடியாதது.

மறுபுறம் தாய்வானை சீனாவுக்கு எதிராக ஏவும் அமெரிக்கா பின்னர் சீன-தாய்வான் யுத்தம் ஒன்று உருவாக்கினால் அப்போதும் இவ்வாறு WW III தோன்றிவிடும் என்று பின்வாங்கலாம்.