மேற்கு யுக்கிரை​னுக்கு யுத்த விமானங்களை வழங்காது

மேற்கு யுக்கிரை​னுக்கு யுத்த விமானங்களை வழங்காது

யுக்கிரைன-ரஷ்யா மோதலில்  யுக்கிரைனை முழுமையாக ஆதரிப்பதாக கூறும் நேட்டோ நாடுகள்  யுக்கிரைனுக்கு தமது யுத்த விமானங்களை வழங்காது என்று கூறி உள்ளன.

தமக்கு யுத்த விமானங்கள் தேவை என்று யுக்கிரைன் சனாதிபதி பல தடவைகள் கூறி இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப முதலில் போலந்து தமது MiG-29 விமானங்களை யுக்கிரைனுக்கு வழங்க செவ்வாய்க்கிழமை முன்வந்தது.

யுக்கிரைன் விமானப்படை MiG-29 விமானங்களை பறக்க தெரிந்தவர்கள் என்றபடியால் அவர்கள் போலந்தின் விமானங்களையும் இலகுவில் பயன்படுத்த முடியும்.

ஆனால் போலந்தின் விமானங்களை நேட்டோ மூலம், ஜெர்மனியில் உள்ள அமெரிக்காவின் தளம் மூலம் யுக்கிரைனுக்கு வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. போலந்து நேரடியாக தமது விமானங்களை வழங்க வேண்டும் என்கிறது அமெரிக்கா. உண்மையில்  யுக்கிரைன்-ரஷ்ய யுத்தத்தை நேட்டோ-ரஷ்ய யுத்தமாக்க அமெரிக்கா விரும்பவில்லை.

பிரித்தானியாவும் நேட்டோ விமானங்கள் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவது சாத்தியம் இல்லை என்று கூறி உள்ளது.

ஜெர்மனியும் தமது யுத்த விமானங்களை யுக்கிரைனுக்கு வழங்க மறுத்து உள்ளது.