சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற Winter 2022 ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங் நேரப்படி இன்று ஞாயிறு நிறைவு பெறுகின்றன. கரோனா மத்தியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பார்வையாளர் இன்றி இந்த போட்டிகள் இடம்பெற்றன.
நோர்வே 16 தங்க பதக்கங்களையும் 8 வெள்ளி பதக்கங்களையும், 13 பித்தளை பதக்கங்களையும் வென்று முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 12 தங்க பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும், சீனா 9 தனங்க பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.
2018ம் ஆண்டு இடம்பெற்ற winter ஒலிம்பிக் போட்டியிலும் நோர்வேயும், ஜெர்மனியும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் வென்று இருந்தன. ஆனால் 4 வருடங்களுக்கு முன் 1 தங்க பதக்கத்தை மட்டும் வென்று 16ம் இடத்தில் இருந்த சீனா இம்முறை 3ம் இடத்தை அடைந்து உள்ளது.
சீனா சார்பில் பதக்கங்களை வென்ற சிலர் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிறந்தவர்கள்.
இம்முறை இடம்பெற்ற 109 போட்டிகளில் 29 நாடுகள் குறைந்தது 1 பதக்கத்தையாவது பெற்று உள்ளன.
சீனா 2008ம் ஆண்டில் summer ஒலிம்பிக் போட்டிகளை அரங்கேற்றி இருந்தது.