தொடர்கிறது Cold-War, எரிகிறது யுக்கிரேன்

Ukraine

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் யுக்கிரெனை தன்வசமாக்கியது சோவியத் யூனியன் (USSR). 1991 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் உடைவின் பின், மீண்டும் யுக்கிரேன் தனி நாடானது. அப்படி அது தனி நாடானாலும் தொடர்ந்தும் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான cold-war இல் சிக்கி எரிகிறது யுக்கிரேன். யுக்கிரேனில் இரண்டு பிரதான அணிகள்; ஒன்று ஐரோப்பிய அணியின் வளர்ப்பு, மற்றையது ரஷ்யாவின் வளர்ப்பு. யுக்கிரேனின் சனத்தொகையின் 17% ரஷ்யர், பெரும்பாலும் நாட்டின் கிழக்கே வாழ்பவர்கள்.

தற்போது அங்கே ஆட்சி செய்வது ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ரஷ்யா சார்பு அரசு, அதேவேளை எதிரணி மேற்கு சார்பானது. கடனைத் சில வருடங்களாக யுக்கிரேன் பொருளாதார மந்த நிலையில் உள்ளது. அதனால் பாரிய வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்கிறது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யுக்கிரேனை  தன்வசம் இழுக்க ரஷ்யா  $15 பில்லியன் வரை உதவி செய்ய சில மாதங்களுக்கு முன் உடன்பட்டது. மேற்கு அதற்கும் மேலாக உதவி வழங்கி தம்வசம் இழுக்க முனைந்திருந்தாலும் எந்தவொரு நாடும் அவ்வளவு தொகையை கொடுக்க முன்வரவில்லை.

தான் கொடுக்கும் கடனுக்கு பிரதியுபகாரமாக யுக்கிரேன் ஐரோப்பிய சமூகத்தில் இணைவதை தவிர்க்கவேண்டும் என எதிர்பார்க்கிறது ரஷ்யா. மீட்கின் ஆதரவுடன் வீதி போராட்டத்தை தொடங்கியது எதிரணி. எதிரணியின் மிகப்பெரிய போராட்டம் தலைநகர் Kiev இல் இடம்பெறுகிறது. இவர்கள் நாளடைவில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டு எரிப்பது போன்ற நடவடிக்கைகளை தொடங்கினர். செவ்வாய் கிழமை போலிசார் சென்ற வாகனம் ஒன்றை தீமூட்டினர். அதுவரை பொறுமையுடன் இருந்த அரசு எதிரணியினரை விரட்ட ஆரம்பித்தனர். இறுதியில் சுமார் 25 பேர் பலியாகினர். இதில் 6 பொலிசாரும் அடங்குவர்.

எதிரணியின் வன்முறைகள், தீயிடல் போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது ரஷ்யா சார்பு அரசை மட்டும் சாடுகிறது மேற்கு. இந்த எதிரணியினர் செய்வதை எவராவது மேற்கு  நாடொன்றில் செய்தால் நிட்சயம் அவர்களை பயங்கரவாதிகள் என்பார்கள் அவர்கள். அமெரிக்கா ரஷ்யா சார்பு தலைவர்கள் மீது சில தடைகளையும் விதித்துள்ளது. ஐரோப்பிய சமூகம் பொருளாதார தடைகள் பற்றியும் பேசுகிறது.

பலம் மிக்க வெளிநாட்டினரின் போட்டி காலமாகிய யுக்கிரேன் அரசியல் விரைவில் அணையும் என்று எதிர்பார்க்க முடியாது. யுக்கிரேன் மேலும் அழிவுகளை வரும் காலங்களில் எதிர்நோக்கலாம்.