அடுத்து வரும் சில மாதங்களில் உத்தர பிரதேசம் உட்பட 5 இந்திய மாநிலங்களில் மாநில தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. ஆனாலும் அவற்றில் உத்தர பிரதேச தேர்தல் பிரதானமானது. பிரதமர் மோதி தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பாரா என்பதை உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் கூறும்.
உத்தர பிரதேசத்தில் 240 மில்லியன் மக்கள் உள்ளனர். இது ஒரு நாடானால், சனத்தொகை அடைப்படையில், இது உலகத்தின் 5ஆவது பெரிய நாடாக இருக்கும். சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து உத்தர பிரதேசம் அதிக சனத்தொகையை கொண்டுள்ளது.
உத்தர பிரதேசம் 403 மாநில உறுப்பினர்களை கொண்டு இருந்தாலும், மத்திய அரசுக்கு இதுவே அதிக உறுப்பினர்களை அனுப்புகிறது. மத்திய அரசுக்கு உத்தர பிரதேசம் 80 உறுப்பினர்களை அனுப்புகிறது. 2014ம் ஆண்டு மோதி கட்சி 71 உறுப்பினர்களையும், 2019ம் ஆண்டு 62 உறுப்பினர்களையும் வென்று இருந்தது.
2017ம் ஆண்டு மாநில தேர்தலில் மோதியின் பா.ஜ. கட்சி மொத்தம் 430 தொகுதிகளில் 312 தொகுதிகளை இங்கு வென்று இருந்தது.
அண்மை காலங்களில் மோதி அரசு புதிதாக நடைமுறை செய்யவிருந்த உழவர் தொடர்பான சட்டங்கள் காரணமாக உழவரின் வெறுப்பை கொண்டிருந்தது.
இந்த மாநில தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி முதல் மார்ச் மாதம் 7ம் திகதி வரை 7 கட்டங்களாக இடம்பெறும். மார்ச் மாதம் 10ம் திகதி வாக்கு எண்ணுதல் ஆரம்பமாகும்.
உத்தர பிரதேசத்துடன் கோவா, மணிப்பூர், புஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய இடங்களிலும் தேர்தல் இடம்பெறுகிறது.