NATO பரவலுக்கு ரஷ்யாவுடன் சீனாவும்  எச்சரிக்கை

NATO பரவலுக்கு ரஷ்யாவுடன் சீனாவும்  எச்சரிக்கை

இதுவரை ரஷ்யா மட்டுமே NATO கிழக்கு நோக்கி பரவுவதை எதிர்த்து வந்திருந்தது. ஆனால் இன்று வெள்ளிக்கிழமை 2022 பெய்ஜிங் Winter ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு சென்றிருந்த ரஷ்ய சனாதிபதி பூட்டினும், சீனா சனாதிபதி சீ ஜின் பிங்கும் கூட்டாக NATO கிழக்கு நோக்கி பரவுவதை எதிர்த்து உள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ரஷ்யாவையும், சீனாவையும் கட்டுப்படுத்த முனைவது, ரஷ்யாவையும் சீனாவையும் மேலும் நெருக்கம் அடைய செய்கிறது. ரஷ்யாவுக்கு ஆதரவாக NATO பரவலை சீனா எதிர்க்கிறது சீனா. சீனாவுக்கு ஆதரவாக தாய்வான் பிரிவதை (any forms of independence of Taiwan) எதிர்ப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

இன்றைய இணைந்த கூட்டு அறிக்கையில் NATO தனது Cold War மனோநிலையை கைவிட வேண்டும் என்று ரஷ்யாவும், சீனாவும் கேட்டுள்ளன.

அண்மையில் அமெரிக்கா, பிரித்தானிய, அஸ்ரேலியா ஆகிய மூன்று நாடுகளும் கூட்டாக உருவாக்கிய AUKUS இராணுவ இணைவையும் ரஷ்யாவும், சீனாவும் கூடவே சாடி உள்ளன.

இன்றைய சந்திப்பின்போது பூட்டினும், சீ ஜின் பிங்கும் பல விசயங்களை நேரடியாக உரையாடி உள்ளனர்.